ஆப்கனின் இடைக்கால அரசு சீன மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் – சீனா
2022-12-14 11:31:22

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹோட்டல் ஒன்று 12ஆம் நாள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில் ஐந்து சீனர்கள் காயமடைந்துள்ளனர். இதற்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஆப்கனின் இடைக்கால அரசு சீன மக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ஆப்கன் அரசு சீன மக்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, சீனா அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்ப்பதையும் வலியுறுத்திக் கூறினார். 

இத்தாக்குதல் தொடர்பில் ஆப்கனிஸ்தானுக்கான சீனத்தூதரகம் அந்நாட்டின் இடைக்கால அரசுடன் இணைந்து சீனர்களை மீட்பதோடு, உரிய புலனாய்வில் ஈடுபட்டு தாக்குதல் தொடுத்தவர்களுக்குக் கடும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக வாங் வேன்பிங் தெரிவித்தார்.