தொங்ட்சாங் பிரதேசத்தில் ஒழுங்கு கண்காணிப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-12-14 10:21:00

சீனப் படை தொங்ட்சாங் பிரதேசத்தில் வழமையான கண்காணிப்பு மேற்கொள்வது குறித்து, சீன மக்கள் விடுதலைப்படையின் மேற்கு போர் மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் லொங் ஷௌஹுவா உரை நிகழ்த்திய போது கூறுகையில், மேற்கு போர் மண்டலத்தின் எல்லை படைப் பிரிவு டிசம்பர் 9ஆம் நாள், சீன-இந்திய எல்லையின் தொங்ட்சாங் பிரதேசத்தில் சீனாவின் உண்மை கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒழுங்கு கண்காணிப்பு மேற்கொண்ட போது, இந்தியப் படை சட்டத்தை மீறி கட்டுப்பாட்டுக்கோட்டைக் கடந்து தடை செய்தது. சீனத் தரப்பு தொழில்முறை விதிமுறையில் நிலைமையைக் கையாண்டது என்று லொங் ஷௌஹுவா தெரிவித்தார். தன் எல்லைப் படையை இந்தியா கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தி, சீனாவுடன் இணைந்து எல்லைப் பகுதியின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது என்றார்.