உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்:சீனா வேண்டுகோள்
2022-12-15 16:21:55

ஐநா பாதுகாப்பவையில் 14ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் பற்றிய விவாதத்தில் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் கூறுகையில், சர்வதேசச் சமூகம் உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பயனுள்ள முறையில் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பலதரப்புவாதம் என்ற கருத்தைச் செயல்படுத்துவதற்கான முக்கியமான தளமாக ஐ.நா உள்ளது. ஐ.நா சாசனத்தின் கடமைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது பற்றி அவர்  சீனாவின் கருத்துக்களை விவரித்தார். ஐ.நா பாதுகாப்பவையின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, அரசியல் முறையில் சர்ச்சைகளைத் தீர்ப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.