துல்லியமான கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
2022-12-15 10:55:34

கொவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சீன அரசு அண்மையில் மேம்படுத்தியுள்ளது. இது, ஆபத்து பகுதிகளை அறிவியல் ரீதியாகவும் துல்லியமாகவும் வகுத்து, தனிமைப்படுத்தும் முறைகளை மேம்படுத்துவது, முதியோர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை முன்னேற்றுவது முதலிய பத்து அம்சங்கள் உள்ளடக்கியதாகும்.

 தொற்றுநோய் தடுப்பினை அறிவியல் அடிப்படையில் துல்லியத்தை தொடர்ந்து மேம்படுத்துவது, மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் இயன்ற அளவில் உறுதி செய்வது முதலியவை இதன் நோக்கமாகும். தற்போது சீன மக்கள் தடையின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உற்பத்தி மற்றும் வாழ்க்கையை இயல்பாக்குவதை நோக்கி சீனச் சமூகம் நகர்கிறது. இதனிடையில், 2021ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை வரவேற்பதோடு உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக இயக்கு ஆற்றலைக் கொண்டு வரும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளன.

 கடந்த 3 ஆண்டுகளில் சீனா, 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் 220 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளையும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும்  தொற்றுநோய் தடுப்பு பொருட்களையும் வழங்கி, உலகளாவிய தொற்றுநோய் தடுப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளது.