15ஆவது சீன-இலத்தின் அமெரிக்கத் தொழில் முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து
2022-12-15 11:16:40

டிசம்பர் 14ஆம் நாள் நடைபெற்ற 15ஆவது சீன-இலத்தின் அமெரிக்க தொழில் முனைவோர் உச்சி மாநாட்டின் துவக்க விழாவிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

தன்னுடைய  வாழ்த்துச் செய்தியில், வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை கொள்கையில் சீனா ஊன்றி நிற்கும் எனத் தெரிவித்துள்ள அவர், சீனா ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு நெடுநோக்கைப் பின்பற்றி, உலகமயமாக்கத்தில் ஊன்றி நின்று, சொந்த வளர்ச்சியை மூலம் உலகிற்குப் புதிய வாய்ப்புகளை வினியோகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீன-லத்தின் அமெரிக்க தொழில் முனைவோர் உச்சி மாநாட்டு அமைப்பு உருவாக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளில், தொழில் நிறுவனங்களுக்குச் சேவைகளை அளித்து, இருதரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும் பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் பங்காற்றியுள்ளதையும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நாள் ஈக்வடார் அரசுத் தலைவர் லாசோ இத்துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.