பெருவில் 30 நாட்கள் அவசர நிலை அறிவிப்பு
2022-12-15 11:05:03

பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்கும் வகையில், பெருவில் நாடளவில் 30 நாட்கள் நீடிக்கும் அவசர நிலை செயல்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பமைச்சர் ஓடரோலா 14ஆம் நாள் அறிவித்தார்.

அவசரக் காலத்தில், படைகளின் ஆதரவுடன், பெரு காவற்துறையினர், உள்நாட்டின் ஒழுங்கைப் பேணிக்காப்பர் என்றும் ஓடரோலா கூறினார்.

இதனிடையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், 2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதைக் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தற்போதைய அரசுத்தலைவர் போலுஆர்டே தெரிவித்துள்ளார்.

தற்போது பெருவின் ஆயுதப்படைகள், விமான நிலையம், நீர் மின்னாற்றல் நிலையம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகளைப் பாதுகாத்து, சமூக ஒழுங்கை மீட்டெடுக்க உதவி வருகின்றன.