நவம்பரில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீண்டு வருகின்றது
2022-12-15 15:15:16

சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய தகவல்களின்படி, நவம்பர் திங்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீண்டு வருகின்றது.

முழு நாட்டிலும் மொத்த தானிய விளைச்சல் 68 ஆயிரத்து 655 கோடி கிலோகிராமாகும். இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகம்.

ஜனவரி முதல் நவம்பர் வரை, முழு நாட்டிலும் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டை விட 3.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இக்காலத்தில், முழு சமூகத்தின் நிலையான சொத்துக்களிலான மொத்த மூதலீட்டுத்தொகை 52 இலட்சத்து 430 கோடி யுவானாகும், கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகம்.

ஜனவரி முதல் நவம்பர் வரை, முழு நாட்டிலும் நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டை விட 2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வேலை வாய்ப்புத் துறை இயல்பாக உள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரை முழு நாட்டிலும் பதிவு செய்யப்பட்ட சராசரி வேலை வாய்ப்பில்லா விகிதம் 5.6 விழுக்காடாகும்.

பொதுவாகக் கூறின், நவம்பர் திங்களில் பல்வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்பந்தங்களைச் சீனா சமாளித்துள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து மீட்கபட்டு நியாயமாக ஏற்றத்தாழ்வுடன் இயங்கு வருகின்றது.