அமெரிக்காவில் 2023 நிதியாண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றம்
2022-12-16 16:02:41

அமெரிக்காவின் செனெட் அவை 2023 நிதியாண்டுக்கான தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை டிசம்பர் 15ஆம் நாள் நிறைவேற்றியது. இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகின.

இச்சட்ட முன்மொழிவின்படி, ஒதுக்கப்பட்ட மொத்த தொகை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டி ஏறக்குறைய 85 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலராகும். முந்தைய நிதியாண்டை விட 8 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அதிகமாகும்.

இச்சட்ட முன்மொழிவில் வான் தாக்குதல் மற்றும் நில பாதுகாப்பு திறன்களையும் இணைய பாதுகாப்பையும் வலுப்படுத்துவது, உக்ரைன் மற்றும் நேட்டோவிற்கான அமெரிக்க ஆதரவை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டில் உக்ரைனுக்குக் குறைந்தது 80 கோடி டாலர் மதிப்புள்ள கூடுதல் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.