சீன-அமெரிக்க தணிக்கை மற்றும் கண்காணிப்புக்கான ஒத்துழைப்பு
2022-12-16 12:23:03

அமெரிக்காவின் பொது நிறுவன கணக்கியல் மேற்பார்வை வாரியம் டிசம்பர் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டு, சீனாவின் பெருநிலப்பகுதி மற்றும் ஹாங்காங்கிலுள்ள கணக்குத் தணிக்கை நிறுவனங்களின் மீது சோதனை மற்றும் புலனாய்வு மேற்கொண்டு, 2021ஆம் ஆண்டு தொடர்புடைய நிறுவனங்கள் மீதான  முடிவை நீக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கப் பங்கு சந்தையில் சீனத் தொழில் நிறுவனங்கள் நுழைவதற்கான ஆக்கப்பூர்வமான சமிக்கையாகும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

இது குறித்து, சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் 16ஆம் நாள் கூறுகையில், சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகம் மற்றும் சீன நிதி அமைச்சகம், அமெரிக்காவின் பொது நிறுவன கணக்கியல் மேற்பார்வை வாரியத்துடன் இணைந்து இவ்வாண்டு ஆகஸ்டு 26ஆம் நாள், சீன-அமெரிக்கத் தணிக்கை மற்றும் கண்காணிப்புக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, பயன்தரும் பல பணிகளை மேற்கொண்டுள்ளன. அதோடு, அமெரிக்காவின் கண்காணிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, மேலும் நிதானமான சர்வதேசக் கண்காணிப்புச் சூழலை உருவாக்கி, உலக முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைக் கூட்டாகப் பேணிக்காக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.