கரோனா வைரஸ் பரவல் பற்றிய உலகச் சுகாதார அமைப்பின் கருத்து
2022-12-16 10:34:24

கரோனா வைரஸ் குறித்து உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் டிசம்பர் 14ஆம் நாள் கூறுகையில், கரோனா வைரஸ் சர்வதேச அக்கறை கொண்ட பொதுச் சுகாதார அவசரநிலையாக அமையாது என்பது அடுத்த ஆண்டு அறிவிக்கப்படக்கூடும் என்றும், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலகச் சுகாதார அமைப்பின் அவசரக் கமிட்டி இது பற்றி விவாதம் நடத்தவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் கூறுகையில், கரோனா வைரஸ் தொடர்ந்து நிலவி வருகின்றது. பல்வேறு நாடுகள் வேறு சுவாசத் தொற்று நோய்களைப் போல், கரோனா வைரஸைச் சமாளிக்க வேண்டும். மேலும், பல்வேறு நாடுகளும் பொதுச் சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்தி, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.