2022 உலக வளர்ச்சிக்கான நடவடிக்கை என்னும் ஊடக நடவடிக்கை
2022-12-16 15:52:37

உயிரினப் பல்வகைமைக்கான பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாடு துவங்கும் வேளையில் சீன ஊடகக் குழுமத்தின் வட அமெரிக்கச் செய்தியாளர் நிலையம், 2022 உலக வளர்ச்சிக்கான நடவடிக்கை என்னும் முன்மொழிவை முன்வைத்து, உலக காலநிலை மாற்றத்திலும் தொடரவல்ல வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

ஐ.நாவின் தலைமை செயலாளர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர், 3 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள், சீன ஊடகக் குழுமத்தின் பல மேடைகளின் மூலம், உலகிற்கு வேண்டுகோள் விடுத்து, தொடரவல்ல வளர்ச்சி கருத்தை முன்மொழிந்தனர்.

சீன ஊடகக் குழுமத்தின் வட அமெரிக்கச் செய்தியாளர் நிலையம் கடந்த 3 ஆண்டுகளில் இந்நடவடிக்கையைத் தொடர்ச்சியாக  நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கை இதுவாகும் என்று ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் தெரிவித்தார். பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், சமூக நிறுவனங்கள், நிபுணர்கள், அறிஞர்கள் ஆகியோர் சாதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் முக்கிய மேடையாக இந்நடவடிக்கை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.