பல்லுயிர் பாதுகாப்பில் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு மைல் கல்
2022-12-17 16:05:32

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில், பாரிஸ் உடன்படிக்கை மைல் கல் என கருதினால், தற்போது நடைபெறுகின்ற காப்-15 மாநாடு, பல்வேறு தரப்புகளால் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு மைல் கல் ஆவதற்கான தருணமாகும்.

காப்-15 மாநாட்டின் 2ஆவது கட்ட கூட்டத் தொடரின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமான சக வாழ்வைக் கூட்டாக முன்னேற்றி, பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களின் பொது சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைத்து, தூய்மையான மற்றும் அழகான உலகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு, இக்குறிக்கோளை நனவாக்குவதற்காக முன்மொழிவுகளையும் வழங்கினார். காப்-15 மாநாட்டின் தலைவர் நாடான சீனா, உலகளாவிய உயிரினப் பல்வகைமை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள புதிய முயற்சி இதுவாகும். சீனாவின் ஒருங்கிணைப்பு மற்றும் ஊக்குவிப்புடன், நடப்பு மாநாட்டில் பல்வேறு தரப்புகளின் ஒத்த கருத்து உருவாக்கப்பட்டு, கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு முன்னேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரினப் பல்வகைமையில், இயற்கைச் சூழல் மண்டலம், உயிரினங்கள் மற்றும் மரபணு ஆகியவை அடக்கம். இவை, மனிதரின் வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய அடிப்படையாகும். தற்போது பல்லுயிர் பாதுகாப்பில் நெருக்கடிகளும், வாய்ப்புகளும் உள்ளன. 2020ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டுக்கோப்பை வகுத்து ஏற்றுக் கொள்வது, காப்-15 மாநாட்டின் மிக முக்கிய இலக்காகும்.

இதற்காக, பல்லுயிர் பாதுகாப்பு குறித்த உலகளாவிய கருத்தொற்றுமையை உருவாக்குவது, பல்லுயிர் பாதுகாப்பு பற்றிய உலகளாவிய நடைமுறையை முன்னேற்றுவது, பல்லுயிர் பாதுகாப்பு மூலம் பசுமை வளர்ச்சியை ஊக்குவிப்பது, பல்லுயிர் பாதுகாப்புக்கான நியாயமான மற்றும் சமமான உலக ஒழுங்கைப் பேணிக்காப்பது ஆகிய 4 முன்மொழிவுகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கினார். உலகளாவிய உயிரினப் பல்வகைமை நிர்வாகத்துக்கு இவை தெளிவான திசையைக் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.