புடின்-மோடி தொலைப்பேசி தொடர்பு
2022-12-17 16:51:42

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் டிசம்பர் 16ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, முதலீடு, எரியாற்றல், வேளாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்து விவாதம் நடத்தினார் என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷிய-இந்தியச் சிறப்பான நெடுநோக்கு கூட்டாளி உறவின் அடிப்படையில் வளர்க்கப்பட்டுள்ள உயர் நிலை இரு தரப்பு ஒத்துழைப்புக்கு இருவரும் மனநிறைவு தெரிவித்தனர். ஜி20 அமைப்பு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மோடி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை என்பது, உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்கும் ஒரே ஒரு வழிமுறையாகும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.