அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி
2022-12-17 16:26:40

அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, 2023ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் மோசமாகும் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

அண்மையில் அமெரிக்காவில் எண்ணெய் விலை குறைந்து, பணவீக்கம் தணிந்து விட்டது. இருப்பினும், பொருளாதார வீழ்ச்சி பற்றிய அமெரிக்க மக்களின் கருத்து இதனால் மாறவில்லை என்று இந்நாளேடு தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு 66 விழுக்காட்டினர் மனநிறைவின்மை தெரிவித்துள்ளனர் என்றும் இக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.