இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
2022-12-17 17:19:32

இந்திய ரிசர்வு வங்கி வெள்ளிகிழமை வெளியிட்ட தரவுகளின் படி, டிசம்பர் 9ஆம் நாள் வரை, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 290 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்ததோடு, 56 ஆயிரத்து 407 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

கடந்த 5 வாரங்களில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

டிசம்பர் 2ஆம் நாள் வரை, இந்தியாவின் அன்னிய செலாவணி தொகை 56 ஆயிரத்து 116 கோடி அமெரிக்க டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.