ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தீங்குவிளைவிக்கும் ரஷியாவின் மீதான தடை நடவடிக்கைகள்
2022-12-18 17:18:50

ரஷியாவின் மீதான 9ஆவது சுற்று தடை நடவடிக்கைகளை அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாஹாலோவா 17ஆம் நாள் கூறுகையில்,

புதிய சுற்று தடை நடவடிக்கைகள் முந்தைய தடை நடவடிக்கைகளைப் போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீவிரமாக்கும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிசக்தி பற்றாக்குறையையும் தடை நடவடிக்கைகள் ஏற்படுத்திய பண வீக்கப் பிரச்சினையையும் சந்தித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொது மக்கள், தொழில்மயமாக்க நிலை குறையும் இடர்பாட்டிலும் சிக்கிகொள்வர் என்றார்.