உலகப் பொருளாதாரத்துக்கு சீனா வழங்கும் வாய்ப்புகள்
2022-12-18 15:43:19

சீனாவின் வருடாந்திர மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 15 மற்றும் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதன் மூலம் சீன பாணி நவீனமயமாக்கம் எவ்வாறு முன்னேற்றப்படுகிறது என்பது மட்டுமல்ல, எத்தகைய புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பதையும் சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள விரும்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் செவ்வனே மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் நோய் தொற்று கட்டுப்பாட்டையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பதை முதலிடத்தில் வைக்க  வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சீனப் பொருளாதார மீட்சி இதனால் விரைவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் இயக்காற்றல் கிடைக்கக் கூடும்.

உள்நாட்டுத் தேவையை முயற்சியுடன் அதிகரிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் பெரிய சீனச் சந்தையில் செயல்பட இது மேலதிக வாய்ப்புகளை வழங்கும். சீனச் சந்தை உலகின் சந்தையாகவும் பகிர்வுச் சந்தையாகவும் மாறுவதற்கும் இது துணைபுரியும்.

உயர்தர வளர்ச்சியை, நவீன சோஷலிச நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான முதன்மை பணியாக கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணித்தல் போன்ற முன்னணி தொழில் நுட்ப ஆய்வு மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் பல்வகை புதிய பொருளாதாரத் துறைகளில் மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற இது உதவும்.

திறப்பு என்பது இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட மற்றொரு தெளிவான தகவல். இது தொடர்பான பல நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீட்டுக்கு மேலும் பரந்த மற்றும் பாதுகாப்பான வளர்ச்சி இடம் வழங்கப்படும்.

சீனாவின் வளர்ச்சிக்கு உலகமும், உலக வளர்ச்சிக்கு சீனாவும் தேவைப்படுகிறது. இவ்வாண்டின் இறுதியில் நடைபெற்ற இக்கூட்டம், உலகிற்கு சீனப் பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மை, சீனச் சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல், சீனாவின் புத்தாக்கம் மற்றும் திறப்பை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவின் நவீனமயமாக்கத்திலிருந்து உலகிற்கு மேலதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.