4வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்
2022-12-18 17:13:33

சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹாய்நான் மாநில அரசின் கூட்டு ஏற்பாட்டில், 4வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 18ஆம் நாள் சான்யா நகரில் துவங்கியது.

நடப்பு விழாவைச் சேர்ந்த தங்க தென்னை விருதுக்கான போட்டியில் 116 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 3761 திரைப்படங்கள் கலந்து கொண்டுள்ளன. அவற்றில் 29 திரைப்படங்கள் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளன.

மேலும், பொது மக்களுக்கு நலன்களைத் தரும் விதம், இவ்விழாவின்போது, முழு தீவிலும் கொண்டாட்டம், திரைப்படங்கள் திரையிடப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன.

4வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 25ஆம் நாள் நிறைவுப் பெறவுள்ளது. அப்போது 10 முக்கிய விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.