சீனாவில் பயன்பாட்டுக்கு வந்த சிறப்பு தங்குதுறை
2022-12-18 15:57:37

புதிய ரக பன்னோக்கு அறிவியல் ஆய்வு கப்பல் ஒன்று டிசம்பர் 18ஆம் நாள் குவாங்சோ கடல் நிலவியல் ஆய்வகத்தின் அறிவியல் ஆய்வுக் கப்பல் தங்குதுறையில் நுழைந்தது. சீனாவின் முதலாவது ஆழ்நீர் அறிவியல் ஆய்வுக் கப்பல் தங்குதுறை, உள்நாட்டில் அறிவியல் ஆய்வுக் கப்பலுக்கான மிகப் பெரிய சிறப்பு தங்குதுறை ஆகிய பெருமைகளுடன் இத்தங்குதுறை அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளதையும், சீனாவின் ஆழ்கடல் ஆய்வுத் தளத்தின் உத்தரவாதத் திறன் மேலும் உயர்த்தப்பட்டுள்ளதையும் இது வெளிக்காட்டியுள்ளது.

குவாங்டோங் மாநிலத்தின் குவாங்சோ நகரின் நான்ஷா பிரதேசத்தைச் சேர்ந்த லோங்சுயே தீவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ள இத்தங்குதுறையில் 5 கப்பல் தங்குமிடங்கள் உள்ளன. குவாங்சோ துறைமுகத்துடன் இணைந்துள்ள இத்தங்குதுறை பல செயல்திறன்களைக் கொண்டு, சீனாவின் சர்வதேச பெருங்கடல் ஆய்வு ஒத்துழைப்பு மற்றும் ஆழ்கடல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு முக்கிய ஆதாரமான வசதியாக விளங்குகிறது.