உயிரின ஆயுதங்கள் தடுப்புக்கான பொது ஒப்புந்தத்தைப் பரிசீலனை செய்யும் கூட்டத்தில் பெரும் சாதனை
2022-12-18 16:23:18

உயிரின ஆயுதங்கள் தடுப்புக்கான பொது ஒப்புந்தத்தைப் பரிசீலனை செய்யும் 9வது கூட்டம் டிசம்பர் 16ஆம் நாள் ஜெனீவாவில் நிறைவுப் பெற்றது. சீனாவின் ஆக்கப்பூர்வ முன்னேற்றத்துடன், இறுதி ஆவணம் ஒன்று இக்கூட்டத்தில் எட்டப்பட்டது. உயிரின ஆயுதங்கள் தடுப்புக்கான பொது ஒப்புந்தத்தின் செயல்திறனை மேலும் வலுப்படுத்தி, இந்த ஒப்பந்தம் பன்முகங்களிலும் பின்பற்றப்படுவதை முன்னேற்றுவதற்கு சிறப்புப் பணிக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஒப்பந்தத்தைப் பின்பற்றுதல் மற்றும் சரிபார்ப்பு, சர்வதேச ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பரிசீலனை உள்ளிட்ட துறைகளில் சாராம்ச ரீதியான பணிகளை மேற்கொண்டு, இந்த ஒப்புந்தத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச ராணுவ கட்டுப்பாடு மற்றும் படைகலக்குறைப்புத் துறையில் பெறப்பட்ட முக்கிய முன்னேற்றமாக இச்சாதனை திகழ்கிறது. உலக உயிரினப் பாதுகாப்பு மேலாண்மைக்கு, இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு தரப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.