காப்-15 மாநாட்டின் 2ஆவது கட்டக் கூட்டத் தொடர் நிறைவு
2022-12-18 15:15:40

காப்-15 எனப்படும் உயிரினப் பல்வகைமை பற்றிய ஐ.நா. பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாட்டின் 2ஆவது கட்ட உயர் நிலை கூட்டத் தொடர் டிசம்பர் 17ஆம் நாள் நிறைவுற்றது. நடப்பு மாநாட்டின் தலைவரும் சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஹுவாங் ருன்ஜியூ நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கினார். 2020ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டுக்கோப்பு கூடிய விரைவில் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வர வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஹுவாங் ருன்ஜியூ கூறுகையில், கடந்த 2 நாட்களின் விவாதம் பயனுள்ளதாக இருந்தது. பல சாதனைகளும் பெறப்பட்டன. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு பற்றி வழங்கிய முன்மொழிவு, உலக உயிரினப் பல்வகைமை நிர்வாகத்துக்கு வலுவான இயக்காற்றலை ஊட்டியுள்ளது. அடுத்த கட்டத்தில் சீனா தொடர்ந்து தலைமை பங்குகளை வெளிகொணர்ந்து, சர்வதேச சமூகத்தால் எதிர்பார்க்கப்பட்ட கட்டுக்கோப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும் என்று தெரிவித்தார்.