உலக புத்தாக்க மையங்களின் 3ஆவது இடத்தில் பெய்ஜிங்
2022-12-19 18:58:14

2022ஆம் ஆண்டிற்கான உலக புத்தாக்க மையங்கள் குறியீட்டின்படி, பெய்ஜிங், முதன்முறையாக லண்டனைத் தாண்டி, இம்மையங்களின் வரிசையில் 3ஆவது இடம் பெற்றுள்ளது. குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம், ஷாங்காய் மாநகரம் ஆகியவை உலகின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து, முறையே 6ஆவது இடம் மற்றும் 10ஆவது இடத்தில் உள்ளன. ஸ்பிரிங்கர் நேட்சர் குழுமம், ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை மையம் ஆகியவை டிசம்பர் 19ஆம் நாள், இக்குறியீட்டைக் கூட்டாக வெளியிட்டன. இதனிடையே இக்குறியீட்டின் சீன மொழி பதிப்பும் ஆங்கில மொழி பதிப்பும் நேட்சர் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

உலக புத்தாக்க மையங்களில் பெய்ஜிங் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தது இதுவே முதன்முறை. மேலும் மொத்தம் 19 சீன நகரங்கள் உலகின் நூறு புத்தாக்க மைய நகரங்களின் பெயர்பட்டியலில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.