சீனாவின் பயணிகள் ஜெட் விமானம் வெளிநாட்டுச் சந்தையில் நுழைவு
2022-12-19 16:08:48

சீனா தற்சார்ப்பு அறிவுசார் சொத்துரிமையுடன் சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த ARJ21 என்னும் பயணிகள் ஜெட் விமானம், டிசம்பர் 18ஆம் நாள் டிரான்ஸ்நூசா என்னும் இந்தோனேசிய விமான நிறுவனத்திடம்  அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் பயணிகள் ஜெட் விமானம் வெளிநாட்டுச் சந்தையில் நுழைவது இதுவே முதல்முறையாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், இரட்டை சுழற்சி என்ற புதிய வளர்ச்சி நிலைமையின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.