3 ஆண்டுகளாக அனைவரும் கரோனா தடுப்பில் ஈடுபடுவதன் நோக்கம்
2022-12-19 11:05:23

அறிவியல் தத்துவத்தில் வைரஸ் என்பது அழிக்கப்பட முடியாத ஒன்றாகும் . இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவரும் இன்னல்களைப் புறக்கணித்து கரோனா தடுப்பில் ஈடுபடுவதற்கான காரணம் வளர்ச்சி மட்டுமே ஆகும். 

2020ஆம் ஆண்டு உற்பத்தி நிலைமை முதலில் வழமைக்குத் திருப்பியதுடன் உலகிலேயே நேர்மறை வளர்ச்சியை நனவாக்கும் ஒரேயொரு நாடாக சீனா மட்டுமே இருந்தது. 2021ஆம் ஆண்டு, சீனாவின் மொத்தப் பொருளாதார அளவு ஒரு கோடியே 14 இலட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானை எட்டி, உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் 18 விழுக்காட்டுக்கும் மேல் பங்காற்றியுள்ளது. 2022ஆம் ஆண்டு, சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வளர்ந்து வருவதுடன் அதன் சமூகப் பொருளாதார வளர்ச்சியும் நிதானமாக உள்ளது.

தற்போது, சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் நுகர்வுக்குப் பெரிதும் ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றது. ஒரு திங்கள் மட்டுமேயான குறுகிய காலத்தில், நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ளூர் அரசுகளின் ஏற்பாட்டில், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வணிக வாய்ப்புகளைத் தேடியுள்ளன.

இதனிடையில், வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலாவது உலக வளர்ச்சியின் உயர் நிலை பேச்சுவார்த்தையைச் சீனா நடத்தியது. அதேவேளை, அரபு உலகத்துடனான மிகப் பெரிய அளவிலான மிக உயர் தரமான தூதாண்மை நடவடிக்கையையும் சீனா மேற்கொண்டது.

கரோனா பரவி வரும் கடந்த 3 ஆண்டுகளில், சீனாவின் வெளிப்புறச் சூழ்நிலை நிதானமாக இல்லை என்ற போதிலும், உலகளவில் தூதாண்மைப் பணியில் சீனா எப்போதும் நம்பிக்கையோடு நண்பர்களை நாடி வருகின்றது.