டிஜிட்டல் பொருளாதாரத்தை பெரிதும் வளர்க்கும் சீனா
2022-12-19 14:41:46

படம்:CFP

சீனா தனது டிஜிட்டல் பொருளாதாரத்தை பெரிதும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை, சீன டிஜிட்டல் பொருளாதார மதிப்பு 11 லட்சம் கோடி யுவானில் இருந்து 45 லட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கு 39.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், முன்னிலை தொழில் நுட்பத்துடன் உலகின் மிகப் பெரிய அளவிலான வலையமைப்பு உள்கட்டமைப்பு வசதியை சீனா கட்டியமைத்துள்ளது. 5ஜி தொழில் நுட்ப அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 17லட்சத்தை எட்டியது.

தொழில், எரியாற்றல், மருத்துவம், போக்குவரத்து, கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பெருந்தரவு, மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் ஒன்றாக இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு, சீனாவின் இணையவழி சில்லறை விற்பனைத் தொகை முதல்முறையாக 10லட்சம் கோடி யுவானைத் தாண்டியது.

சீனா 2016ஆம் ஆண்டு, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற போது, டிஜிட்டல் பொருளாதாரத்தை, ஜி20 அமைப்பின் புதுமையான வளர்ச்சி வரைவுக்கான்ன முக்கிய கருப்பொருட்களில் ஒன்றாக சேர்க்க  வேண்டும் என்று முதல்முறையாக தெரிவித்தது.

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கூட்டமாக வளர்த்து, உலக நாட்டுகளின் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளுடன் இணைந்து  முயற்சி செய்து, டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று  சீனா  எதிர்பார்க்கிறது.