அரபு கலை விழாவுக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
2022-12-19 21:12:33

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 19ஆம் நாள், 5ஆவது அரபு கலை விழாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையில் வாழையடி வாழையாக நிலவி வரும் நட்புறவு வலுவடைந்து வருகிறது. பண்டைகால பட்டுப்பாதை முதல் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் வரை, மானுட பண்பாட்டு பரிமாற்ற துறையில் இருதரப்பும் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பும் நடப்பு கலை விழாவை வாய்ப்பாகக் கொண்டு, முதலாவது சீன-அரபு நாடுகள் உச்சி மாநாட்டின் சாதனைகளை நடைமுறைப்படுத்தி, சீன-அரபு நெடுநோக்கு கூட்டாளியுறவுக்கு நிரந்தர இயக்காற்றலை ஊட்டி, புதிய யுகத்தில் சீன-அரபு பொது சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.