உலகளவில் முதலாவது 3200 டன் திறனுடைய காற்றாலை நிறுவும் கப்பல் ஒப்படைப்பு
2022-12-20 16:54:33

 உலகளவில் முதலாவது 3200 டன் திறனுடைய காற்றாலை நிறுவல் கப்பல், டிசம்பர் 20ஆம் நாள் காலை ஜியாங்சூ மாநிலத்தின் சிடோங் நகரிலுள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து ஒப்படைப்புக்கான பயணத்தை தொடங்கியது.

N966 எனும் இக்கப்பல், பெல்ஜியம் நாட்டிற்கு வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அதன் முக்கிய பாரந்தூக்கியின் திறன் 3200 டன்னுக்கும் மேலாகும். இதுவரை இத்தகைய கப்பல் கொண்டிருக்கும் மிகப் பெரிய திறன் இதுவாகும். உலகளவில் 4ஆவது தலைமுறையைச் சேர்ந்த முதலாவது காற்றாலை நிறுவல் கப்பலான N966, அதிக செயல்திறன், ஆற்றல் செலவு குறைவு போன்ற பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. அது, பிரிட்டனின் வடக்கு கடல் காற்றாலை பண்ணையின் கட்டுமானத்துக்குச் சேவைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.