ஒற்றுமை உருவாக்கும் ஆற்றல்
2022-12-20 19:27:08

டிசம்பர் 20ஆம் நாள் சர்வதேச மனித ஒற்றுமை தினமாகும். 21ஆம்  நூற்றாண்டு சர்வதேச உறவுகளின் அடிப்படை விழுமியங்களில் "ஒற்றுமை" ஒன்றாகும் என்று ஐ.நா ஆயிரமாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜி20 அமைப்புத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 29ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம், முதலாவது சீன-அரபு நாட்டு உச்சிமாநாடு ஆகிய பலதரப்பு தூதாண்மை நடவடிக்கைகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய உரைகளில், ஒற்றுமை என்பது திறவுகோலான சொல்லாகும். "ஒற்றுமையே ஆற்றலாகும், ஒற்றுமையுடன் வெற்றி பெற முடியும்". சிக்கலான நிலைமையைச் சமாளிப்பதற்கு சீன அரசுத் தலைவர் அளித்த பதில் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.