உயர் நிலை திறப்புப் பணியை முன்னேற்றி வரும் சீனா!
2022-12-20 16:34:15

அண்மையில் நடத்தப்பட்ட சீன மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில், அன்னிய முதலீட்டை பெரிதும் ஈர்த்து பயன்படுத்த வேண்டும் என்றும், உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றி, வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்பு தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 1 லட்சம் 8 ஆயிரத்து 986 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.4 விழுக்காடு அதிகமாகும்.

நிதானமாக இயங்கிய பொருளாதாரம், விரிவாக்கப்படுகின்ற திறப்புப் பணி, மேம்படுத்தப்பட்டு வருகின்ற வணிகச் சூழல் உள்ளிட்டவை, அன்னிய முதலீட்டைச் சீனா ஈர்த்து வருதற்கு முக்கிய காரணங்களாகும். புதிய யுகத்தில், வெளிநாட்டுத் திறப்புக்காக மேலும் ஆக்கப்பூர்வமான நெடுநோக்குத் திட்டத்தைச் சீனா மேற்கொண்டு வருகிறது.

மேலும், சந்தை நுழைவுக்கான அனுமதி அளவை விரிவாக்கி, நவீனச் சேவை துறையின் திறப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு சீனாவின் சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. சீனா, முதன்முறையாக அமெரிக்காவை விஞ்சி, உலகத்தின் முதலாவது பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது.

உயர் நிலை திறப்புப் பணியை முன்னேற்றி வருகின்ற சீனா, பொருளாதார உலகமயமாக்கத்துக்குப் புதிய இயக்காற்றலை ஊட்டுவது உறுதி.