ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்காவின் உறுதிமொழி நிறைவேற்றப்பட முடியுமா?
2022-12-20 11:10:45

ஆப்பிரிக்காவில் இருள் நிறைந்த இடங்களை மின்சார விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கான உதவித் திட்டத்தை 2013ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஹுசைன் ஒபாமா வெளியிட்டார். 2020ஆம் ஆண்டின் இறுதி வரை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இவ்வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.

ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான நிதி உள்ளிட்ட முதலீட்டை அதிகரிப்பதாகவும் ஒபாமா 2014ஆம் ஆண்டில் உறுதியளித்தார். ஆனால், ஆப்பிரிக்க எய்ட்ஸ் திட்டத்திற்கான நிதி உதவியையும் பிற திட்டங்களின் உதவியையும் அமெரிக்க அரசு குறைத்தது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க-ஆப்பிரிக்க உச்சிமாநாடு மீண்டும் நடைபெற்றது. இதில், ஆப்பிரிக்காவுடனான உறவை ஆழமாக்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு வலியுறுத்தப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது 5500 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யப் பைடென் அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க-ஆப்பிரிக்க உறவு மோசமாகி வருகின்றது. அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்யவில்லை. கேவலமான வார்த்தைகளால் ஆப்பிரிக்க நாடுகளை வர்ணித்தார். இதற்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தவிரவும், புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பிறகு, அமெரிக்கா காலாவதியான தடுப்பூசிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியது.

தற்போது, ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது. அமெரிக்கா காட்டிய நல்லெண்ணம் உண்மையா என்று ஆப்பிரிக்க மக்கள் சந்தேகிக்கின்றனர்.