காப்15 மாநாட்டில் பல்லுயிர் பாதுகாப்புக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய உடன்பாடு
2022-12-21 11:26:58

காப்-15 மாநாட்டில், உயிரியல் பல்வகைமை குறித்து குன்மிங்-மாண்ட்ரீல் உடன்படிக்கை 19ஆம் நாள் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நிறைவேற்றப்பட்டது.  அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் பூமியின் 30 விழுக்காட்டு நிலம், நீர்ப்பரப்பு மற்றும் கடல் பகுதிகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும்.

பல்வேறு நாடுகளின் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்பாட்டுத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் வகையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியைத் திரட்ட வேண்டும். 2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு குறைந்தது 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வழங்க வேண்டும். அது போல, 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைச் செயல்படுத்தினால், நிதி பற்றாக்குறை தணிவடைந்து, உலகளாவிய  பல்லுயிர் பாதுகாப்புக்கு  வலுவான உத்தரவாதம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியிலுள்ள  உயிர்களுக்கு பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். இது, உலகளாவிய பல்லுயிர்  பாதுகாப்புக்கு முக்கிய வழிகாட்டலை வழங்கும். இந்த முயற்சியின் ஒருப் பகுதியாக,  வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரிப்பதற்காக உயிரியல் பல்வகைமை குறித்த குன்மிங் நிதியத்தை நிறுவுவதைச் சீன அரசு  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.