கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு குறித்த சீனாவின் நடவடிக்கைகள்
2022-12-21 17:19:40

டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய சுமார் 3 ஆண்டுகாலத்தில், சீனா பொது மக்களுக்கு பொருந்திய கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது மக்களின் உயிர் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்நோயின் பாதிப்பை மிக பெருமளவில் குறைத்துள்ளது. தொற்று நோயின் புதிய நிலைமைக்கிணங்க, கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்களை சீனா இடைவிடாமல் மேம்மபடுத்தி வருகின்றது என்றார்.

பூஸ்டர் டொஸ் செலுத்தும் பணி நிதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்புடைய மருந்து மற்றும் சோதனை பொருட்களின் வினியோகம் சீராக இருக்கின்றது. சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலக பொருளாதார மீட்சியை முன்னேற்றி, மனித சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கான பொது சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

எல்லை நுழைவுக்கான தடைக்காப்பு கொள்கை பற்றிய கேள்விக்கு மாவ் நிங் பதிலளிக்கையில், கோவிட்-19 நோய்தொற்று பரவிய பிறகு, உலகளவில் முதலில் உற்பத்தியை மீண்டும் தொடஹ்கிய சீனா உயர்நிலை திறப்பை முன்னேற்றி வருகிறது. விசா கொள்கையை மேம்படுத்துவது, சர்வதேச விமான சேவையை அதிகரிப்பது, நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு நடவடிக்கையை எளிதாக்குவது ஆகியவற்றின் மூலம் மக்களின் தொடர்புகளுக்கு வசதியளித்து வருவதோடு, உலகளாவிய தொழில் மற்றும் வினியோச சங்கிலிகளின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கும் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது. நிலைமையின் மாற்றத்துக்கிணங்க எல்லை கடந்து செல்பவருக்கு மேலதிக வசதிகளை வழங்குவோம் என்று தெரிவித்தார்.