ஆப்கானுக்கான சர்வதேச சமூகத்தின் உதவி
2022-12-21 15:59:58

ஆப்கான் நிலைமை குறித்து டிசம்பர் 20ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவை வெளிப்படை கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆப்கானிஸ்தானுக்கான உதவியை சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மீட்சியடையும் போக்கில் உள்ள ஆப்கானிஸ்தான், அமைதியையும் வளர்ச்சியையும் நனவாக்கும் பாதையில் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஆப்கான் மக்களை சர்வதேச சமூகம் மறக்காமல், அவர்களுக்கான ஆதரவு மற்றும் உதவியை அதிகரிக்க வேண்டும். பயங்கரவாதத்தை உறுதியாக அழிக்க வேண்டும். பொது மக்களின் வாழ்க்கை சிக்கல்களை நீக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் சரியான வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பேச்சுவாரத்தையையும் தொடர்பையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஆப்கான் மக்களின் சொத்துகளைத் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று சீன பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார்.