உலகளவில் முக்கிய விளையாட்டு செய்திகள்
2022-12-21 16:38:14


2022ஆம் ஆண்டு உலகளவில் முதல் 10 முக்கிய விளையாட்டுச் செய்திகளை சீன ஊடகக் குழுமம் தெரிவு செய்து வெளியிட்டது. இவற்றில் முதல் 5 செய்திகள் பின் வருமாறு—

  1.      பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 2 உலக சாதனைகளும், 17 குளிக்கால ஒலிம்பிக் சாதனைகளும் புதிய பதிவுகளாகின. உலகளவில் 200 கோடிக்கும் மேற்பட்டோர்களை ஈர்த்த இப்போட்டியின் பார்வையாளர் விகிதம் வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.

2.     கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டியில் ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

3.     கென்னாவின் விளையாட்டு வீரர் எலியுட் கிப்சோகே(Eliud Kipchoge) ஆடவர் மாரதான் போட்டியின் புதிய உலக சாதனையைப் படைத்தார்.

4.     ருமேனியாவின் விளையாட்டு வீரர் டேவிட் போபோவிட்(David Popovici) ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 13 ஆண்டுகள் தொடர்ந்த உலக சாதனையை முறியடித்தார்.

5.     புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர்(Roger Federer) மற்றும் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்(Serena Williams) டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.