சீன-ஆஸ்திரேலிய உறவின் திசை திருத்தம்
2022-12-22 20:12:28

டிசம்பர் 21ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், ஆஸ்திரேலிய தலைமை ஆளுநர் ஹெல்லி மற்றும் தலைமை அமைச்சர் அல்பானிஸும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர். அதே நாள் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பெய்ஜிங்கில் 6ஆவது சுற்று சீன-ஆஸ்திரேலிய தூதாண்மை மற்றும் நெடுநோக்கு பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவை மேம்படுத்துவது குறித்து பல ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

கடந்த மாதத்தில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் அல்பானிஸுடன் இந்தோனேசியாவின் பாலி தீவில் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவை மேம்படுத்துவதற்கான திசையை காட்டினார்.

உறுதியான நிதானமான சீன-ஆஸ்திரேலிய உறவு, இரு நாட்டு மக்களின் நலனுக்குப் பொருந்தியது மட்டுமல்ல,  ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்கும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.