மும்பையிலிருந்து சீனாவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட சர்க்கரை
2022-12-22 20:09:50

சீனாவின் லன்ச்சோ நகரத்தின் புதிய பகுதியிலிருந்து கிடைத்த தகவலின் படி, 265 டன் சர்க்கரையை ஏற்றிச்சென்ற தொடர் வண்டி, டிசம்பர் 21ஆம் நாள் லன்ச்சோ புதிய பகுதியிலுள்ள சொங்ச்சுவன் வடக்கு நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் மும்பை, சீனாவின் ச்சின்ச்சோ துறைமுகம், லன்ச்சோ புதிய பகுதி ஆகியவற்றை இணைக்கும் புதிய மேற்கு தரை-கடல் பாதைக்கான தொடர்வண்டி வெற்றிகரமாக இயங்குவதை இது காட்டுகிறது. இதனால், சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சர்க்கரை இறக்குமதிக்கு புதிய வழித்தடம் ஒன்று உருவாக்கப்படுள்ளது. இந்தியாவின் சர்க்கரை இப்பாதையின் மூலம் சீனாவின் கன்சூ மாநிலத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள தேசிய நிலை புதிய பகுதி, லன்ச்சோ புதிய பகுதியாகும். இவ்வாண்டு முதல் 11 திங்களில் இப்புதிய பகுதிக்கும், கசாகஸ்தான், ரஷியா, ஈரான், லாவோஸ், இந்தியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இடையே 200க்கும் மேலான தொடர் வண்டிகள் இயங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.