ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் முதலாவது மானிடப் பரிமாற்றக் கருத்தரங்கு
2022-12-22 17:05:33

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் முதலாவது மானிடப் பரிமாற்றக் கருத்தரங்கு டிசம்பர் 21ஆம் நாள் சீனாவின் ட்சிங்தாவ் நகரில் நடைபெற்றது. “கல்வித் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மக்களுக்கிடையில் தொடர்பை முன்னேற்றுவது” குறித்து, இக்கருத்தரங்கில் பங்கெடுத்த 40 விருந்தினர்கள் கருத்துக்களைப் பரிமாற்றி, விவாதம் நடத்தினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான முன்மாதிரி பகுதியின் கட்டுமானத்தை மையமாகக் கொண்டு, இவ்வமைப்பின் நாடுகள் மற்றும் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”முன்மொழிவில் இணைந்துள்ள நாடுகளின் கல்வித் துறை ஒத்துழைப்பை முன்னேற்றி, பொது மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் நட்புறவைத் தூண்டுவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.