சீன-இந்தியப் படைகளின் 17வது இராணுவத் தளபதி நிலை பேச்சுவார்த்தை
2022-12-22 19:24:32

சீன-இந்தியப் படைகளின் 17வது இராணுவத் தளபதி நிலை பேச்சுவார்த்தை டிசம்பர் 20ஆம் நாள் நடைபெற்றது. ஜூலை 17ஆம் நாள் நடைபற்ற பேச்சுவார்த்தை முதல் இதுவரை பெறப்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில், திறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான முறையின் மூலம், சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதியிலுள்ள உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பிரதேசத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து இரு தரப்புகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையின்போது, சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, நெருங்கிய தூதாண்மை மற்றும் இராணுவத் தொடர்பை நிலைநிறுத்தி, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை வெகு விரைவில் எட்ட வேண்டும் என்று இரு தரப்புகளும்  ஒப்புக் கொண்டுள்ளன.