குவாங்சோவில் உலக முதலீடு முன்னேற்ற மாநாடு
2022-12-22 17:44:24

2022ஆம் ஆண்டு குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்துக்கான உலக முதலீடு முன்னேற்ற மாநாடு டிசம்பர் 21ஆம் நாள் குவாங்சோ நகரில் நடைபெற்றது. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், உள்நாட்டின் தலைமை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். 853 ஒத்துழைப்பு திட்டங்கள் இம்மாநாட்டில் எட்டப்பட்டன. அவற்றுக்கான முதலீட்டுத் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகும்.

மேலும், 48 முக்கிய திட்டங்களில் கையொப்பமிடும் விழா இம்மாநாட்டில் நடத்தப்பட்டது. முன்னேறிய தயாரிப்பு, உயிரித் தொழில் நுட்பம், புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பம், உணவு மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட தொழில்களுடன் இத்திட்டங்கள் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.