சீனாவுடனான ஒத்துழைப்பு இல்லாமல் ஐரோப்பாவுக்கு போட்டித்தன்மைச் சாதகம் இல்லை:ஹங்கேரி தலைமையமைச்சர்
2022-12-22 14:25:48

கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனி மற்றும் அமெரிக்காவுக்குப் பதிலாக,  ஹங்கேரியில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகச் சீனா மாறி வருகின்றது.

இந்நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பா மற்றும் ஹங்கேரிக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் ஒர்பான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுடனான பொருளாதார தொடர்பை ஐரோப்பிய ஒன்றியம் துண்டிப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சீனாவுடனான ஒத்துழைப்பு இல்லாமல், ஐரோப்பாவுக்கு அதன் போட்டித்தன்மைச் சாதக நிலை இழக்கும் என்றும் குறிப்பிட்டார்.