போர் அல்லது அமைதி? மோதல் அல்லது ஒத்துழைப்பு?
2022-12-22 19:29:49

2022ஆம் ஆண்டு ஐரோப்பாவில் கோவிட்-19 நோய் தொற்று பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத நிலையில், ரஷிய-உக்ரைன் மோதல் இக்கண்டத்துக்கு மீண்டும் தாக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. வைரஸ் பரவல், காலநிலை மாற்றம் மற்றும் இம்மோதலால் ஏற்பட்ட கடும் உணவு நெருக்கடி, உலகளவில் 34.5 கோடி மக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனிடையே எரியாற்றல் நெருக்கடியும் நிலவி வருகிறது.

மோசமாகி வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் எப்படி செயல்பட வேண்டும்? எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய அமெரிக்கா, ரஷிய-உக்ரைன் மோதலைத் தீவிரமாக்கியுள்ளது. ஆசியாவிலும் அமெரிக்கா பிரதேச நிலைமையைக் குழப்பமாக்க முயன்று வருகிறது. மேலும் இந்நாடு பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஆசியாவின் அமைதியான கடலில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை ஈடுபடுத்த முயன்றது. இத்தகைய செயல்களில், பனிப்போர் சிந்தனை, மேலாதிக்க வாதம் மற்றும் கொள்ளைக்காரர்களின் தர்க்கம் நிறைந்திருக்கின்றன.

ஆயுதம் மற்றும் மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்காமல் உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா? ஆம். சீனா மற்றும் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அமைதியை நேசித்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியைத் தெரிவு செய்கின்றன.

ஆர்சிஇபி உடன்படிக்கை 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் நடைமுறைக்கு வந்தது. உலகளவில் மிகப்பெரிய தாராள வர்த்தக மண்டலம் இதனால் உருவாகியுள்ளது. இவ்வுடன்படிக்கையில் இணைந்துள்ள நாடுகளுக்கிடையே மேலும் வசதியான வர்த்தகமும், மேலும் நெருக்கமான மனிதத் தொடர்பும் காணப்படுகின்றன.

திறப்பு, ஒத்துழைப்பு, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவை மாற்ற முடியான கால ஓட்டமாகும். அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பது, போட்டி மற்றும் ஒத்துழைப்பில் கூட்டு வெற்றியை நனவாக்குவது ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகளின் நெடுநோக்கு பார்வை, அறிவு மற்றும் சிந்தனைத்திறன் தேவையாகும். மனிதகுலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது முழு உலகின் பொது விருப்பமாகும்.