சீனாவின் தானிய உற்பத்தி பாதுகாப்பு
2022-12-22 20:08:57

சீனாவின் மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போதைய வேளாண்துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளின் விவகாரங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டிற்கான ஏற்பாடுகள் வழங்கப்பட உள்ளன.

2022ஆம் ஆண்டில் சீனாவின் தானிய உற்பத்தி நிலைமை எப்படி?  அதன் தனிச்சிறப்புகள் என்னென்ன?

2022ஆம் ஆண்டில் சீன தானிய உற்பத்தி மொத்த அளவு, 68 ஆயிரத்து 655 கோடி கிலோகிராமாகும். இது கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகம். சீனாவின் தானிய உற்பத்தியளவு தொடர்ந்து 8 ஆண்டுகளில் 65 ஆயிரம் கோடி கிலோகிராமைத்  தாண்டியுள்ளது. சீன தானிய உற்பத்தி அதிகரிப்புக்கு நிலைத்தன்மை என்பது மிக முக்கியமானது.

2022ஆம் ஆண்டு சீனாவில் தானிய விதைப்பு நிலப்பரப்பு 11 கோடியே 83 இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டராகும். இது கடந்த ஆண்டை விட 0.6 விழுக்காடு அதிகமாகும். பல்வேறு இடங்களில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தானிய விதைப்பு நிலப்பரப்பை விரிவாக்கி வருகின்றன.

தானிய உற்பத்தியின் நிலைத்தன்மை மற்றும் அதிகரிப்பை உறுதி செய்யும் வகையில், நடுவண் மற்றும் மாநில அரசுகள் நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.