சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்
2022-12-23 15:50:04

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 23ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளிங்கனுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், கடந்த மாதத்தில் பாலி தீவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் இடையேயான பேச்சுவர்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. இது, இரு நாட்டுறவு கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபட்டு, சீரான பாதைக்குத் திரும்புவதற்கு நெடுநோக்கு ரீதியிலான வழிகாட்டல் அளித்துள்ளது. அமெரிக்கா சீனாவின் நியாயமான கவலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சீனாவின் வளர்ச்சியை அடக்குமுறை செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும், புத்தாண்டில் புதிய நிலை தோன்ற வேண்டும். இரு நாட்டுறவு மீட்சி பெறுவதை இரு நாடுகள் மற்றும் உலக மக்கள் பொதுவாக எதிர்பார்க்கின்றனர். இரு நாட்டுத் தலைவர்கள் வழிநடத்திய திசையில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய 2 பெரிய நாடுகளில் சரியான அணுகு முறையைத் தேடிக் கண்பிடித்து இரு நாட்டு மக்களின் நன்மைகளுக்கும் உலக அமைதி மற்றும் நிலைப்புத்தன்மைக்கும் முயற்சி மேற்கொள்ள இரு தரப்பும் பாடுபட வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.

சீனத் தரப்புடன் இணைந்து இரு நாட்டுறவின் வழிகாட்டல் கோட்பாடுகள் குறித்து விவாதித்து பொறுப்புணர்வுடன் அமெரிக்க-சீன உறவைப் மேலாண்மை செய்ய வேண்டும் என்றும், இரு தரப்பின் கூட்டு நலன்களுக்குப் பொருத்தமான துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. மேலும், ஒரே சீனா என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வரும் அமெரிக்கா, ‘தைவான் சுதந்திரத்துக்கு’ ஆதரவளிக்காது என்று பிளிங்கன் கூறினார்.