சந்தை திறப்பை விரிவாக்கி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் சீனா
2022-12-23 16:45:08

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு யுடிங் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகள் மற்றும் மேலும் நீண்டகாலத்தில் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புக்கு நெடுநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மத்திய பொருளாதாரப் பணிக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடு பற்றிய பணிக்கு விவரமான ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்தும் தரம் மற்றும் நிலையைத் தொடர்ந்து உயர்த்தும் விதம், சீன வணிக அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்று தெரிவித்தார்.

வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து விரிவாக்குவது, முதலீட்டை ஈர்க்கும் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவது, முதலீட்டுக்கான ஊக்குவிப்பு மற்றும் சேவைக்கான உத்தரவாதத்தைத் தொடர்ந்து அதிகரிப்பது, வணிகச் சூழலைத் தொடர்ந்து சீராக்குவது ஆகியவற்றுக்காக சீன வணிக அமைச்சகம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.