2022ஆம் ஆண்டு அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய முக்கிய செய்திகள்
2022-12-23 16:52:15

அறிவியல் துறைக்கு, 2022ஆம் ஆண்டு அசாதாரண ஆண்டாகும். சாங்ஜியாங்கோ நகரில் இருந்த காற்றாற்றல் பெய்ஜிங்கிலுள்ள விளக்குகளை ஒளிரச் செய்வது, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளின் பயன்பாட்டில் சிறியதாகும். மனிதர்கள் அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் ஆய்வு செய்யும் பயணம் தொடர்கிறது.

2022ஆம் ஆண்டு சீன மற்றும் உலக அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய 10 முக்கிய செய்திகளை சீன ஊடகக் குழுமம் தனித்தனியாக வெளியிட்டுள்ளது.

சீனத் தேசிய விண்வெளி ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளது, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள் நடைமுறைக்கு வந்துள்ளன, ஜொல்மோலுங்மா சிகரத்தில் சீனாவின் வானிலை நிலையம் உலகளவில் மிக உயரமான இடத்திலுள்ள வானிலை நிலையம் என்ற பெருமையுடன் கட்டியமைக்கப்பட்டுள்ளது, சீன மற்றும் வெளிநாட்டு அறிவியலாளர்கள் உலகளவில் கருங்குழியின் முதலாவது படத்தை வெளியிட்டனர், அமெரிக்க மற்றும் ஜப்பான் அறிவியலாளர்கள் இதுவரை மிக குளிரான பொருளை உருவாக்கியுள்ளனர், தியன்வென்-1 செவ்வாய் கிரக ஆய்வுக் குழு 2022ஆம் ஆண்டிற்கான உலக விண்வெளி விருதை பெற்றது, உலகின் முதலாவது தொடர்ந்து சுறுசுறுப்புள்ள விரைவு வானொலி வெடிப்பை சீனாவின் ஃபாஸ்த் எனும் தொலைநோக்கி கண்டுப்பிடித்துள்ளது உள்ளிட்டவை இந்த முக்கிய செய்திகளில் இடம்பெற்றுள்ளன.