சீனாவில் முன்னேறி வரும் கிராமப்புற மறுமலர்ச்சி
2022-12-23 15:44:32

சீன கிராமப்புற மறுமலர்ச்சி பணியின் பன்முக முன்னேற்றத்துக்கு 2022ஆம் ஆண்டு முக்கிய ஆண்டாகும். கிராமப்புற தொழில்கள் விறுவிறுப்பாக வளர்ந்து வருகின்றன. கிராமப்புறக் கட்டுமானம் பன்முகங்களிலும் முன்னேறி வருகின்றது. விவசாயிகளின் வருமானம் சீராக அதிகரித்து வருகின்றது. வறுமை ஒழிப்பு பணியின் சாதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற மறுமலர்ச்சியில் சீனா உறுதியாக காலடி எடுத்து வைத்துடுள்ளது. இவ்வாண்டு முதல் 9 திங்கள் காலத்தில் சீனாவில் வறுமையிலிருந்து விடுபட்டு வேலை வாய்ப்பு பெற்றுள்ள உழைப்பாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டின் இலக்கு முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடுவண் அரசு உதவி அளித்ததோடு, இவ்வாண்டில் வேளாண் பொருட்களின் உற்பத்தி இடங்களில் 16 ஆயிரம் குளிர் சாதனங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் அடிப்படை வசதி ஆக்கப்பணி நிதானமாக மேம்படுத்தப்பட்டு  வருகின்றது.

இவ்வாண்டின் முதல் 9 திங்கள் காலத்தில் இணைய வழியின் மூலம் வேளாண் பொருட்களின் விற்பனை தொகை, 37 ஆயிரத்து 451 கோடி யுவானாகும். புதிய தொழிலும் புதிய வர்த்தக வழிமுறையும் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.