சின்ஜியாங்கில் முதலாவது பீடபூமி விமான நிலையம் திறப்பு
2022-12-23 15:50:35

சீனாவின் உருமுச்சி நகருக்கும் தகோர்கன் மாவட்டத்துக்குமிடையிலான விமான சேவையை China Southern விமான நிறுவனம் டிசம்பர் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. சீனாவின் மேற்கு முனையில் அமைந்துள்ள, சின்ஜியாங்கில் முதலாவது பீடபூமி விமான நிலையமான தகோர்கன் ஹோங்சிலாஃபூ விமான நிலையம் அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படுவதை இது காட்டியுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் மற்றும் 400 டன் சரக்குகளின் போக்குவரத்து தேவையை இது பூர்த்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையத்தைச் சேர்த்து, சின்ஜியாங்கில் 25 விமான நிலையங்கள் உள்ளன. பயணிகள் தகோர்கன் ஹோங்சிலாஃபூ விமான நிலையத்திலிருந்து ச்சாங்ஷா, ச்சொங்ச்சிங், குவாங்சோ உள்ளிட்ட பெரிய நகரங்களுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.