டோட் ஸ்தான் மீதான தடை நடவடிக்கைகள்:சீன வெளியுறவு அமைச்சக அறிவிப்பு
2022-12-23 16:36:57

சீனாவின் வெளிநாட்டு தடைகளுக்கு எதிர்ப்பு சட்டத்தின்படி, யு மெள சுன், டோட் ஸ்தான் ஆகியோர் மீது தடை செய்ய முடிவு எடுத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சம் டிசம்பர் 23ஆம் தெரிவித்தது.

 திபெத்தின் மனித உரிமை விவகாரத்தைச் சாக்குப்போக்காக, சீனாவின் இரு அதிகாரிகள் மீது அமெரிக்கா டிசம்பர் 9ஆம் நாள் சட்டவிரோதமாக பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், சீனத் தரப்பு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது.

1, சீனாவிலுள்ள மேற்கூறிய இருவரின் பல்வகை சொத்துகள் முடக்கப்படும்.

2, சீனாவிலுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர் இவ்விருவருடன் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

3, அவர்களுக்கும் அவர்களுடைய நெருங்கிய குடும்பத்தினர்களுக்கு விசா வழங்கவும், எல்லையில் நுழையவும் அனுமதி இல்லை.