சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு
2022-12-23 17:03:48

அண்மையில் அமெரிக்கா தன்னால் கூறப்பட்ட திபெத் மனித உரிமை பிரச்சினையைச் சாக்குபோக்காகக் கொண்டு, இரு சீன அதிகாரிகளின் மீது சட்டவிரோதமான தடை நடவடிக்கையை மேற்கொண்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பதிலளிகையில், அமெரிக்காவின் இச்செயல், சீனாவின் உள் உள்விவகாரங்களில்  கடுமையாகத் தலையீடு செய்து, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை மீறியுள்ளது. இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது என்று தெரிவித்தார்.