2022இல் சீனாவின் தூதாண்மைத் துறை சாதனைகள்:வாங்யீ
2022-12-25 16:33:55

2022ஆம் ஆண்டு சர்வதேச நிலைமையும் சீனாவின் வெளிநாட்டுறவும் என்ற ஆய்வுக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 25ஆம் நாள் உரையாற்றினார்.

அவர் கூறுகையில் 2022ஆம் ஆண்டில், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில், சீனத் தனிச்சிறப்புடைய தூதாண்மைப் பணியைச் சீனா பன்முகங்களிலும் மேற்கொண்டு, உலக அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சிக்காகப் புதிய பங்கினை ஆற்றியுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் ஆறு முக்கிய தூதாண்மைப் பணிகள் பற்றியும் அவர் விவரித்தார்.

அரசுத் தலைவரின் தூதாண்மைப் பணிக்கும் மைய பணிகளுக்கும் மேலும் சிறப்பாகச் சேவை புரிந்து கொள்ள வேண்டும். வெளியுறவு தளவமைப்பை ஒட்டுமொத்தமாக விரிவாக்க வேண்டும். உலக மேலாண்மைத் துறையில் பொது நலன்களை நாட வேண்டும். சீனாவின் உயர் தர வளர்ச்சிக்குச் செயலாக்க முறையில் சேவை புரிய வேண்டும். சீனாவின் உரிமை மற்றும் நலன்களை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும். உலகளவில் சீனாவின் பரப்புரை ஆற்றலையும் கருத்து வெளிப்பாட்டுரிமையையும் முயற்சியுடன் அதிகரிக்க வேண்டும் என்று வாங்யீ சுட்டிக்காட்டினார்.